Home » நீண்டநாள் காதலியை கரம் பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்! பிறந்தநாளில் இணைந்த பந்தம்

நீண்டநாள் காதலியை கரம் பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்! பிறந்தநாளில் இணைந்த பந்தம்

by namthesamnews
1 comment
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, தனது நீண்டநாள் காதலியான ஸ்வாதி அஸ்தானாவை மணந்தார்.
வலது கை வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி (Navdeep Saini) இந்தியாவின் சார்பாக ஆகஸ்ட் 2019ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதல் முறையாக களம் இறங்கினார்.
இதுவரையில் கிரிக்கெட்டின் மூன்று வடிவிலான போட்டிகளிலும் இந்தியாவிற்காக விளையாடியுள்ளார்.
இவர் 2 டெஸ்ட், 8 ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 டி20 போட்டிகளில் களமாடியுள்ளார்.
தற்போது 31 வயதாகும் சைனி, தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்ததன் மூலம் வாழ்வின் புது அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.
இவரது காதலி ஸ்வாதி அஸ்தானா (Swathi Asthana) ஒரு Fashion, Lifestyle and Travel Vlogger என்று அறியப்படுகிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமண புகைப்படங்களை சைனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து “உன்னுடன், ஒவ்வொரு நாளும் அன்பின் நாள். இன்றிலிருந்து நாம் என்றென்றும் இணைந்திருப்போம்.
23:11:23 எனும் சிறப்பான நாளான இன்று, வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் நாங்கள் உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தையும் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளனர்.
அதாவது நவம்பர் 23 ஆம் திகதி அவரது பிறந்தநாள் என்பதை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதுமணத் தம்பதிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

You may also like

1 comment

துப்பாக்கி முனையில் இளைஞரை கடத்தி திருமணம்! அரசு வேலை கிடைத்ததும் தட்டித் தூக்கிய கும்பல் - Namthes December 2, 2023 - 8:05 am

[…] பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வட இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் இதுபோன்ற […]

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00