82
சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா தன்னிடம் X (twitter) சமூக வலைதள கணக்கு இல்லை என்று கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுப்மன் கில்லும், சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவும் காதலித்து வருவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதற்கு ஏற்றாற்போல் கில் விளையாடிய ஆட்டம் குறித்து சாராவின் எக்ஸ் (twitter) பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறி பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதனை வைத்து, சாரா தனது எக்ஸ் பதிவுகள் மூலம் காதலர் கில்லை ஊக்கப்படுத்தி, தன் காதலை வளர்த்து வருகிறார் என ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர்.
இந்த நிலையில் சாரா டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) ஸ்டோரியில் வெளியிட்ட கருத்துகள் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அவர் தனது ஸ்டோரியில், “சமூக வலைதளமானது நமது அன்றாட நடவடிக்கை, மகிழ்ச்சி, துக்கம் என அனைத்தையும் பகிர்ந்துகொள்ளும் மிகச்சிறந்த இடமாக உள்ளது.
ஆனால் இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி குழப்பத்தை உண்டாக்குவதை பார்க்கும்போது, இணையத்தின் உண்மை மற்றும் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுகிறது.
உண்மைக்கு புறம்பான என்னுடைய deepfake புகைப்படங்களையும் கூட நான் பார்த்திருக்கிறேன்.
ஆள்மாறாட்டம் செய்து மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் எனது பெயரில் போலியாக எக்ஸ் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
என்னிடம் எக்ஸ் கணக்கு இல்லை மற்றும் எக்ஸ் நிர்வாகத்தின் மூலம் அந்த போலி கணக்குகள் நீக்கப்படும் என்று நம்புகிறேன்.
உண்மையின் இழப்பில் பொழுபோக்கு ஒருபோதும் வரக்கூடாது. நம்பிக்கை மற்றும் எதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட தகவல்தொடர்புகளை ஊக்குவிக்க முயல்வோம்” என கூறியுள்ளார்.
இந்த ஸ்டோரியின் மூலம் சாராவின் எக்ஸ் பதிவுகளை வைத்து கருத்து, மீம்ஸ் வெளியிட்டு வந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.