237
லிபியாவின் கடலோரப் பகுதியில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 60 பேர் நீரில் மூழ்கி பலியானதாக சர்வதேச குடியேற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று சுமார் 86 பேருடன் படகு ஒன்று சுவாரா நகரிலிருந்து புறப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் நுழையும் முயற்சியில் பயணம் மேற்கொண்ட அந்த புலம்பெயர்ந்தவர்கள் படகு, லிபியாவின் கடலில் ஏற்பட்ட உயரமான அலைகளால் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் குழந்தைகள் உட்பட 61 பேர் மாயமாகியுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் நைஜீரியா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர் பிழைத்தவர்கள் லிபிய தடுப்பு மையத்தில் மருத்துவ உதவிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் மிகவும் ஆபத்தான இடப்பெயர்வு பாதைகளில் ஒன்றாக மத்திய தரைக்கடல் விளங்குகிறது.
இந்த ஆண்டில் மத்திய தரைக்கடல் பகுதியில் 2,250க்கும் மேற்பட்டவர்கள் மரணித்துள்ளதாக IOM செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு சூன் மாதத்தில் தெற்கு கிரீஸ் பகுதியில் மீன்பிடி படகில் சென்ற 78 பேர் இறந்தனர்.
மேலும் 100 பேர் கடலை கடக்கும் முயற்சியில் தோல்வியடைந்து மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.