92
சீனாவின் தலைநகரில் பெய்து வரும் கடுமையான பனிப்பொழிவால் அங்குள்ள பள்ளி மற்றும் சுற்றுலா தலங்களை சீன அரசு மூடியுள்ளது.
சீனாவின் வடக்கு பகுதிகள் கடுமையான பனிப்பொழிவை பெறக்கூடும் என்பதால், பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கையை சீன வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வட சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தின் பல பகுதிகளை பனிப்புயலானது தாக்கியுள்ளது.
பனிப்பொழிவால் மாணவர்கள் சிரமப் படுவதை தவிர்க்க பள்ளிகள் மூடப்பட்டு ஒன்லைன் வழியாக வகுப்புகளை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனங்கள் தனது ஊழியர்களிடம் நெகிழ்வு தன்மையுடன் இயங்கும்படி கூறப்பட்டுள்ளது.
தீவிரமான வானிலை காரணமாக வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடங்களையும் சீன அரசு தற்காலிகமாக மூடியுள்ளது.
சில ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இயங்கிய சில ரயில்களும் குறைந்த வேகத்திலேயே இயக்கப்பட்டது.
பெய்ஜிங் நகரில் இந்த வார இறுதியில், வெப்பநிலை மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் மாதத்தின் பாதியில், வெப்பநிலை சராசரியாக மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் இருக்கக் கூடும்.
சாலை மீட்புப் பணிகளுக்காக சுமார் 6,000க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் மற்றும் 5,800க்கும் அதிகமான பனி அகற்றும் கருவிகள் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.