நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்னும் 2 தினங்களில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் லியோ. இந்நிலையில் லியோ திரைப்படம் இப்படித்தான் இருக்கு என்ற தகவல் கிடைத்துள்ளது. படம் வெளி வரும் முன்னரே படத்தின் விமர்சனம் பார்ப்போம் வாங்க.
‘லியோ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானதும் பல பிரேம்களை வைத்தும், கதாபாத்திரங்களை வைத்தும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிடத் தொடங்கிவிட்டனர். தற்போதைய இந்திய டிரண்டிங் `லியோ’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தொடர்ந்து வருகிற அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
நடிகர் விஜயின் ‘லியோ’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்கள் பலரும் பல வகைகளில் இத்திரைப்படத்தைக் குறித்து டீகோட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ‘லியோ’ திரைப்படம் ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்’ ( A History of Violence) என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் ரீமேக் எனவும் கூறி வருகின்றனர்.
‘லியோ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்தே இந்த தகவல் படு வேகமாக பரவி வருகிறது. அப்படி ஒரிஜினல் எனச் சொல்லப்படுகிற ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்’ திரைப்படத்திற்கும் ‘லியோ’ திரைப்படத்திற்க்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக கூறுகின்றனர்.
‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்’ என்கிற DC-யின் கிராபிக் நாவலை மையப்படுத்தி இயக்குநர் டேவிட் க்ரோனென்பெர்க் அதே தலைப்பில் இயக்கியிருந்த இத்திரைப்படம் கடந்த 2005-ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் ,திரைக்கதைக்காகவும் நடிப்பிற்காகவும் அந்தச் சமயத்தில் பல விருதுகளையும் வென்றது.
ஒரு சிறு நகரத்தில் தனக்கென ஒரு கஃபே வைத்து தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஹீரோ ஒரு வன்முறைச் சம்பவத்தைத் தடுப்பதன் மூலமாகப் பிரபலமடைந்து விடுவார். அதைத் தொடர்ந்து அவர் டாம் ஸ்டால் கிடையாது ஜோயி குசாக் என்பதாக அடையாளம் காட்டும் ஒரு கும்பல், அவரைக் கொலை செய்ய முயற்சி செய்வார்கள். அதன் பிறகு டாம் ஸ்டாலுக்கும் அந்த கேங்கின் பெரிய தலைகளுக்கும் இடையில் ஒரு சில ட்விஸ்ட்களுடன் நடக்கும் மோதலே இத்திரைப்படத்தின் கதை.
இந்த படத்தின் கதையையே இயக்குனர் லோகேஷ் லியோ வடிவில் தந்துள்ளார். ‘லியோ’ திரைப்படத்தின் டிரெய்லரில் விஜய் கையில் துப்பாக்கியை ஏந்திய வண்ணத்தில் இருப்பது போன்ற ஃபிரேம் இந்தத் திரைப்படத்திலும் இருக்கிறது என்பதாக ரசிகர்கள் இவ்வாறு ஒப்பிட்டுள்ளனர்.
இந்தப் படத்தைப் பார்த்த பலரும் ‘லியோ’வுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இப்படி ஆயிரம் காரணங்கள்இருக்கவே செய்கின்றன. இது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜிடமே கேள்வி முன்வைக்கப்பட்டபோது, “படம் LCU-வா இல்லையா, இந்தப் படத்தோட ரீமேக்கா இல்லையா… இதெல்லாம் இப்ப சொன்ன நல்லாயிருக்காது. வந்து தியேட்டர்ல பாருங்க அந்த எக்ஸ்பீரியன்ஸ் ஸ்பாயில் பண்ண வேண்டாம்” என்பதாகப் பதில் சொல்லியிருந்தார்.
அதுவும் ஒரு வகையில் உண்மைதான் படம் திரைக்கு வந்த பிறகு ரசிகர்களின் ஒப்பீடு சரியா