லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.
அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் ஒக்டோபர் 19 ஆம் திகதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், ‘லியோ’ படம் வெற்றி பெறுவதற்காக லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் பாத யாத்திரையாக திருப்பதி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ், படம் நன்றாக வந்துள்ளதாகவும் ‘லியோ’ படம் வெளியான பிறகே ரஜினியின் 170 ஆவது படத்திற்கு ஸ்கிரிப்ட்களை தயார் செய்ய போவதாகவும் கூறியுள்ளார்.