சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் ஏர்லைன்ஸ் (Scoot Airlines), திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, இந்த வழித்தடத்தில் A321neo என்ற ரக விமானத்தை இயக்கி வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ள நிலையில், திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதேபோல், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en என்ற ஸ்கூட் ஏர்லைன்ஸ் (Scoot Airlines) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.