இலங்கையில் மீண்டும் யானைக்கால் நோய் அதிகரித்து வரும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் தெரிவிக்கின்றது. புத்தளம் மாவட்டத்தின் கிராமப்புறங்களில் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சுகாதார பூச்சியியல் அதிகாரி புத்திக சமிலஇ ஜப்பான்ஜபராஇ சல்வேனியா போன்ற தாவரங்கள் பெருகி வருவதே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் “யானைக்கால் நோயில் கிராமப்புற யானைக்கால்இ நகர்ப்புற யானைக்கால் என இரண்டு பகுதிகளாகப் பிரித்து காணப்படுகின்றது.
இது ஜப்பான் ஜபரா மற்றும் சல்வேனியாவால் அடிக்கடி பரவுகிற நிலையில் பான்சோனியா என்ற நுளம்பு வகைகள் பரவி வருகின்றது. தற்போது 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் கிராமப்புற யானைக்கால் நோயின் அச்சுறுத்தலுக்கு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.