125
நம் உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியே நமது உடலின் ஆரோக்கியத்தை காக்கும் முக்கிய காரணியாகும்.
நோய்களை வராமல் தடுக்க நாம் முயன்றாலும், வந்த நோயை எதிர்த்து சண்டையிட உடலுக்கு சக்தி தேவை.
அந்த சக்தியை கொடுத்து உடலை வலுவாக்கிட சில சிற்றுண்டி வகை உணவுப்பொருட்கள் உள்ளன.
நட்ஸ் மற்றும் பாலிஃபீனால் நிறைந்த உலர் பழங்கள் நமக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.
பாதாம் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் E, பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளது. இது உடலுக்கு தேவையான சக்தியாகும்.
பிஸ்தா பருப்பிலும் வைட்டமின் E, கால்சியம், செலினியம் மற்றும் தாமிரம் ஆகிய தாதுக்கள் நிறைந்துள்ளன.
பேரீட்சையில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகிய தாதுக்கள் அடங்கியுள்ளன.
உலர் திராட்சையில் இரும்பு சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.
உலர் அத்திப்பழத்தில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை நிறைந்துள்ளது.
மேலும் வால்நட்ஸ், ஆப்ரிகாட் ஆகியவற்றில் நார்ச்சத்து காணப்படுகிறது.
இவைகளை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் இது எடை அதிகரிப்பு பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது இல்லை.
எனவே, அவர்கள் இவற்றை உண்ண வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.