116
லெஜண்ட் கிரிக்கெட் தொடரில் ஜமைக்காவின் சாட்விக் வால்டன் அதிரடியாக சதம் விளாசிய மிரள வைத்தார்.
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் மணிப்பால் டைகர்ஸ் (Manipal Tigers) மற்றும் பில்வாரா கிங்ஸ் (Bhilwara Kings) அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற பில்வாரா கிங்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி மணிப்பால் டைகர்ஸ் அணியில் ராபின் உத்தப்பா (Robin Uththappa), சாட்விக் வால்டன் (Chadwick Walton) தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இருவரும் சிக்ஸர் மழை பொழிந்தனர். இதன்மூலம் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
30 பந்துகளை எதிர்கொண்ட உத்தப்பா, 5 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வால்டன் புயல் வேகத்தில் மட்டையை சுழற்றினார்.
அவர் 55 பந்துகளில் 104 ரன்கள் குவித்து மிரள வைத்தார். இதில் 6 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும்.
ஜிம்பாப்வே மசாகட்ஸா (Masakadza) 37 ரன்கள் எடுக்க, மணிப்பால் டைகர்ஸ் 211 ரன்கள் குவித்தது.
அடுத்து கடின இலக்குடன் களமிறங்கிய பில்வாரா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ரன்கள் எடுக்க திணறிய அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 122 ரன்களே எடுத்து படுதோல்வி அடைந்தது.
மணிப்பால் அணி தரப்பில் இம்ரான் கான் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
38 வயதில் அதிரடி சதம் விளாசிய வால்டன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
1 comment
[…] நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின. […]