97
இத்தாலியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, இத்தாலியின் Bologna நகரில் இருந்து Rimini ko நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
பென்சா-போர்லி எனும் இடத்தில் ரயில் சென்றபோது எதிரில் அதே வழித்தடத்தில் இன்னொரு ரயில் வந்துள்ளது.
இதனைக் கண்ட ரயில் Engine ஓட்டுநர் பிரேக்குகளை போட்டு ரயிலை நிறுத்த முயற்சித்துள்ளார்.
ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக இரு ரயில்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் ரயில்களின் சில பெட்டிகள் தடம்புரண்டன. இதனால் அதில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், காயமடைந்த 17 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தினால் அந்த வழித்தடத்தில் சில மணிநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிய வந்துள்ளது.
இத்தாலியின் போக்குவரத்து துறை அமைச்சர் Matteo Salvini விபத்து குறித்து கூறுகையில்,
“நிலைமையை கண்காணித்து வருகிறோம். இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.