அமெரிக்காவில் பலத்த சூறாவளி புயல் ,இடி மின்னல் காரணமாக 80000க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இன்றி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் டென்னஸ்ஸி (Tennessee)) மாகாணத்தின் கல்லாட்டின் மற்றும் ஹெண்டர்சன்வில்லே (Hendersonville) வடகிழக்கு நாஷ்வில்லே(Nashville) உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் சூறாவளி புயல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த இயற்கை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்து உள்ளதாக அவசரகால மேலாண் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
மேலும்இ 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இதில் வடகிழக்கு நாஷ்வில்லே பகுதியில் புறநகர் பகுதியான மேடிசன் நகரில் 3 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மான்ட்கோமெரி கவுன்டி(Montgomery County) பகுதியில் கிளார்க்ஸ்வில்லே என்ற இடத்தில் நேற்று மதியம் சூறாவளி புயல் தாக்கியதில் 2 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் 3 பேர் உயிரிழந்து உள்ளது தெரிய வந்துள்ளது.
எனவேஇ இதனை தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியானது துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.
சூறாவளி புயலை அடுத்து கிளார்க்ஸ்வில்லே (Clarksville) பகுதியில் அவசரநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என CNN செய்தி வெளியிட்டுள்ளது.