Home » இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 15, 2024

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 15, 2024

by namthesamnews
0 comment

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 15.03.2024, சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” என்று எந்தச் செயலிலும் துணிச்சலாக இறங்குவீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். காலத்திற்கு ஏற்றார்போல் வியாபாரத்தை மாற்றுவீர்கள்.

ரிஷபம்

வேலையில் பல்வேறு நெருக்கடிகளை சந்திப்பீர்கள். சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். காதலியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். பழைய கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள்.

மிதுனம்

உங்கள் பெயரைக் கெடுக்க உடன் இருப்பவர்களே முயற்சி செய்வார்கள். தொழிலுக்காக பணம் புரட்ட சிரமப்படுவீர்கள்.

கடகம்

நிலையான வருமானத்தை உருவாக்க பாடுபடுவீர்கள். தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வீர்கள். அரசு ஊழியர்கள் அதிக வருமானம் பெறுவீர்கள்.

சிம்மம்

வேலை இடத்தில் தேவையில்லாத பிரச்சனையை சந்திப்பீர்கள். பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக கடன் வாங்குவீர்கள்.

கன்னி

சிறிய வியாபாரத்தில் பெரிய வருமானம் பெறுவீர்கள். சேமிப்பில் இருந்த பணத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். புதிய ஆர்டர்களை வெளியூர்ப் பயணங்களில் அடைவீர்கள்.

துலாம்

“போனால் போகட்டும் போடா” என்ற விரக்தி நிலையில் இருப்பீர்கள். ஏதோ ஒருவகையில் வியாபாரத்தில் இடையூறுகளை சந்திப்பீர்கள். வாகனங்கள் பழுதாகி சிரமப்படுவீர்கள்.

விருச்சிகம்

“காலங்களில் அவள் வசந்தம்” என்று காதல் வலை வீசுவீர்கள். இல்லத்தில் பொங்கும் மகிழ்ச்சி பெருக்கால் மன நிம்மதி அடைவீர்கள். அரசு ஊழியர்கள் அதிக வருமானம் பெறுவீர்கள்.

தனுசு

சிறிய முதலீடுகளில் அதிக வருமானம் பார்ப்பீர்கள். வியாபாரத்தில் கொழுத்த லாபம் அடைவீர்கள்.

மகரம்

“கையில வாங்கினேன், பையில போடல, காசு போன இடம் தெரியல” கை மீறி போகும் குடும்ப செலவால் கஷ்டப்படுவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு பண உதவி செய்வீர்கள்.

கும்பம்

“சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க”என்று உறவுகளை ஒன்றிணைக்க முயற்சி செய்வீர்கள். கடுமையாக உழைத்து வருமானத்தை பெருக்குவீர்கள்.

மீனம்

“நீங்கள் தொட்டால் எங்கும் பொன்னாகுமே” எந்த நிலையிலும் தொழிலில் முன்னேற்றத்தை காண்பீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00