குரோதி வருடம் சித்திரை மாதம் 26 ஆம் தேதி வியாழக்கிழமை 9.05.2024 சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
நினைத்த காரியங்களை தடை இன்றி நடத்தி மள மளவென்று பொருளாதாரத்தை பெருக்குவீர்கள்.
வெளி வட்டாரத்தில் உங்கள் கொடியை பறக்க விட்டு செல்வாக்கை காட்டுவீர்கள்.
கனவில் காதலித்த பெண்ணை நனவில் கை பிடித்து சந்தோச நடை போடுவீர்கள்.
ரிஷபம்
கண் காது போன்ற உறுப்புகளில் நோய் தொந்தரவு ஏற்பட்டு மருத்துவச் செலவு செய்வீர்கள்.
வியாபாரத்தில் திடீர் சரிவுகளை சந்திப்பீர்கள்.
இக்கட்டான சூழ்நிலையில் நண்பர்களின் உதவியை நாடுவீர்கள்.
மிதுனம்
அலட்சியமான போக்கால் சிலர் அரசாங்க வேலையை இழப்பீர்கள்.
தூர தேச பயணங்களளில் துன்பத்தை அனுபவிப்பீர்கள்.
புதிய தொழில் தொடங்குவதில் அவசரம் காட்டாதீர்கள்.
கடகம்
புதிய தொழிலில் அதிக லாபம் பார்ப்பீர்கள்.
மக்கள் பணி செய்து அரசியல்வாதிகள் செல்வாக்கை உயர்த்துவீர்கள்.
பொருளாதாரத்தை குவிக்க புதுப்புது திட்டங்கள் தீட்டுவீர்கள்.
சிம்மம்
உங்கள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் மனைவி சந்தோஷ பூக்களை தூஙவுவதால் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.
வியாபாரத்தில் வெற்றி பெற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.
உடலை வருத்தும் சின்ன சின்ன நோய்களுக்கு மருத்துவம் பார்ப்பீர்கள்.
கன்னி
கவனக்குறைவாக இருந்தால் வீட்டில் பணம் களவு போகும் நிலைக்கு ஆளாவீர்கள்.
வியாபாரத்தில் புதிய சிக்கல் தோன்றி பொருள் இழப்பை சந்திப்பீர்கள்.
கொடுத்த கடனை திருப்பி அடைக்க முடியாமல் மரியாதை குறைவு ஏற்பட்டு மனம் வருந்துவீர்கள்.
துலாம்
விதண்டாவாதமாக பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்காதீர்கள்.
அடகு வைத்த நகையை மனைவிக்கு மீட்டுக் கொடுப்பீர்கள்.
வியாபாரத்தில் மந்தமான நிலையை காண்பீர்கள்.
விருச்சிகம்
எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகி திருப்தி அடைவீர்கள்.
வியாபாரத்தில் கிடுகிடு லாபம் பார்ப்பீர்கள்.
பொறுப்பாக நடந்து உறவினர்கள் மத்தியில் மரியாதையை உயர்த்தி கொள்வீர்கள்.
தனுசு
தொழிலை வெகு சிறப்பாக நடத்தி பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள்.
சின்ன சின்ன தொல்லைகளால் பாதிக்கப்படுவீர்கள்.
எதிரிகள் உண்டாக்கும் இடையூறுகளைத் தாண்டி வருவீர்கள்.
மகரம்
பஞ்சு மெத்தையில் படுத்தாலும் தூக்கம் வராமல் புரள்வீர்கள்.
புதுப்புது சிக்கல்கள் தோன்றி பொருளாதார பாதிப்பு அடைவீர்கள்.
மற்றவர்கள் மத்தியில் மரியாதை குறைந்து மனம் சங்கட்டப்படுவீர்கள்.
கும்பம்
பிள்ளைகளின் வெற்றியால் பெருமிதம் அடைவீர்கள்.
அரசாங்க ஊழியர்கள் அனுகூலமான பயனை பெறுவீர்கள்.
உறவினர் மத்தியில் செல்வாக்கை உயர்த்தி கொள்வீர்கள்.
மீனம்
கணவன் மனைவி உறவை கல்கண்டாய் இனிக்க செய்வீர்கள்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.
வணிகத்தில் ஈடுபடும் நீங்கள் வலுவான லாபத்தை அடைவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)