Home » இன்றைய ராசிபலன்: 30 மார்ச், 2024

இன்றைய ராசிபலன்: 30 மார்ச், 2024

by namthesamnews
0 comment

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 17 ஆம் தேதி சனிக்கிழமை 30.03.2024 சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என நினைக்கிறீர்களா, இப்போது செய்யாதீர்கள். கையில் இருக்கும் பொருட்களை பத்திரப்படுத்த தவறாதீர்கள் .

ரிஷபம்

வெளியூர்ப் பிரயாணங்கள் தொழிலுக்குத் தேவையான வெற்றிகளைப் பெறுவீர்கள். இல்லத்தரசிகள் மூலமாக பணச்சுமையை குறைப்பீர்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் அதிக லாபத்தை அடைவீர்கள்.

மிதுனம்

புது நண்பர்களின் சேர்க்கையால் அதிக நன்மை அடைவீர்கள். வியாபாரம் வெற்றிகரமாக நடப்பதால் பொருளாதார மேம்பாடு காண்பீர்கள்.

கடகம்

தேவையில்லாத கற்பனையால் துன்பப்படுவீர்கள். எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாற்றம் அடைவீர்கள். அடுத்தவரின் பேச்சைக் கேட்டு அகலக்கால் வைக்காதீர்கள்.

சிம்மம்

வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் பணத்தால் வியாபாரத்தை மாற்றி அமைப்பீர்கள். நிலத்தில் போட்ட முதலீடுகளால் வருமானத்தைப் பெருக்கி நிம்மதி அடைவீர்கள்.

கன்னி

ஆசையுடன் கேட்ட ஆபரணத்தை வாங்கிக்கொடுத்து மனைவியை ஆனந்தத்தில் ஆழ்த்துவீர்கள். உறவினர்களின் ஒத்தாசையால் உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள் மூலமாக நல்ல செய்தி பெறுவீர்கள்.

துலாம்

அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அந்தஸ்தை அதிகரிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை நிலைநாட்டுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாட்டை செய்வீர்கள்.

விருச்சிகம்

நல்ல பாதையில் நடந்தாலும் பொல்லாத வம்பால் பொல்லாப்பு அடைவீர்கள். வெளியூர்ப் பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட மறக்காதீர்கள்.

தனுசு

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். வேலையிடத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். இடப்பிரச்சினையில் ஏற்பட்ட சச்சரவுக்காக காவல் நிலையம் செல்வீர்கள்.

மகரம்

முறைப்புடன் இருந்த கணவன் மனைவி உறவை இறுக்கமாக மாற்றுவீர்கள். பெரியோர்களின் நல்லாசியால் ஊக்கம் பெறுவீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிப்பீர்கள்.

கும்பம்

பொங்கிவரும் அருவிபோல் பொருள் வரவை அதிகரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கைக்கு கிடைத்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவீர்கள்.

மீனம்

விரோதிகளின் எதிர்ப்பால் விசனப்படுவீர்கள். விடாமுயற்சியால் அதை முறியடிப்பீர்கள். எப்பாடுபட்டாவது கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்றால் அவமானப்படுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00