குரோதி வருடம் சித்திரை மாதம் 12 ஆம் தேதி வியாழக்கிழமை 25.04.2024 சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
பெண்கள் தைரியமாக காரியம் ஆற்றுவீர்கள்.
பிள்ளைகளுக்கான கல்வி செலவை அதிகரிப்பீர்கள்.
தொழிலுக்கு தேவையான உதவிகளை தேடுவீர்கள்.
ரிஷபம்
கலைத்துறையினர் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள்.
எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
மிதுனம்
அவமானங்களைக் கூட வெகு மானங்களாக மாற்றிக் கொள்வீர்கள்.
தொழில்துறைகள் சூடுபிடித்து லாபத்தை அதிகரிப்பீர்கள்.
வியாபார சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள்.
கடகம்
குடும்பத் தேவைகளை மனநிறைவுடன் பூர்த்தி செய்வீர்கள்.
வேலைப்பளுவால் உடல் சோர்வடைவீர்கள்.
கலைத்துறையில் தேவையற்ற பிரச்சனைகளால் அவமானப்படுவீர்கள்.
சிம்மம்
எந்த வேலையை முதலில் பார்ப்பது என்று குழம்புவீர்கள்.
ஊழியர்கள் ஒத்துழைப்பால் உற்பத்தியைப் பெருக்குவீர்கள்.
சகோதர உறவுகளுக்கு செலவு செய்வீர்கள்.
கன்னி
குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள்.
புதிய வியாபாரங்களில் தடம் பதிப்பீர்கள்.
அடுத்தவர் பிரச்சனையில் தலையிட்டால் அவமானப்படுவீர்கள்.
துலாம்
உறவினர்களின் சச்சரவுகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுவீர்கள்.
விளையாட்டுக் பேசி வினையை அறுவடை செய்வீர்கள்.
வெளியூர் பயணங்களில் குறைவான பலனை அடைவீர்கள்.
விருச்சிகம்
வீண் உறுதிமொழிகள் கொடுத்து வில்லங்கத்தில் மாட்டாதீர்கள்.
எடுத்த காரியத்தில் ஏதாவது தடங்களை சந்திப்பீர்கள்.
புதிய தொழில் துறைகளில் ஈடுபடாதீர்கள்.
தனுசு
வெற்றிமேல் வெற்றியைக் குவித்து சந்தோஷத்தில் திளைப்பீர்கள்.
புதிய சொத்து வாங்குவீர்கள்.
எதிர்பார்த்த இடத்தில் பணம் பெறுவீர்கள்.
மகரம்
அரசாங்க ஒப்பந்தங்களை பெறுவீர்கள்..
கிளைத் தொழில்களுக்கு அடி போடுவீர்கள்.
நண்பரின் உதவியால் மனை இடம் வாங்குவீர்கள்.
கும்பம்
செல்லுமிடமெல்லாம் சிறப்புப் பெறுவீர்கள்.
நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள்.
குடும்பத்திற்காக கார் வாங்குவீர்கள்.
மீனம்
இனம் தெரியாத கவலையால் தூக்கத்தை தொலைப்பீர்கள்.
ஏதாவது செலவு வந்து கை காசை செலவு செய்வீர்கள்.
தந்தையாரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்வீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)