Home » இன்றைய ராசிபலன்: 24 மே , 2024

இன்றைய ராசிபலன்: 24 மே , 2024

by namthesamnews
0 comment

குரோதி வருடம் வைகாசி மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 24.05.2024 சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

எடுத்த காரியத்தில் ஏதாவது இடையூறை சந்திப்பீர்கள்.

அஷ்டம சந்திரனால் அவஸ்தைப்படுவீர்கள்.

தொழில் சம்பந்தப்பட்ட புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவீர்கள்.

ரிஷபம்

வியாபாரத்திற்கு தேவையான நல்ல செய்திகளை வெளிநாட்டிலிருந்து பெறுவீர்கள்.

தொழிற்சாலைகளில் உற்பத்தியைப் பெருக்குவீர்கள்.

தொழிலில் உருவாகும் போட்டிகளை சுலபமாக முறியடிப்பீர்கள்.

மிதுனம்

விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

ஆடல் பாடல் என்று இன்பமாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.

தொழிலில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் புத்திசாலித்தனமாக அடுத்த கட்டத்திற்கு நகர்வீர்கள்.

கடகம்

நெருஞ்சி முள்ளைப் போல ஒரு கவலை நெஞ்சில் உறுத்துவதால் உறக்கமிழப்பீர்கள்.

மனைவி மக்களின் ஆதரவால் மன நிம்மதி அடைவீர்கள்.

தேவைக்காக அதிக விலை கொடுத்து பொருள்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்

முயற்சி செய்யாமலேயே முன்னேற்றப் பாதைகளின் கதவுகளை திறப்பீர்கள்.

விவசாயிகள் விளைச்சல் அதிகமாகி மகிழ்ச்சி அடைவீர்கள்.

பணியாளர்கள் கனிவுடன் கவனிக்கப்படுவீர்கள்.

கன்னி

ஆடை ஆபரணங்கள் வாங்கி கொடுத்து மனைவி மக்களை அசத்துவீர்கள்.

புதிய பொருட்களால் வீட்டை அலங்கரிப்பீர்கள்.

உரிய நேரத்தில் உறவினர்களின் உதவி பெறுவீர்கள்.

துலாம்

செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெறுவீர்கள்.

அனைவரையும் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட வைப்பீர்கள்.

நண்பரின் குடும்பப் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள்.

விருச்சிகம்

வளர்பிறை சந்திரன் உதவியால் தொழிலில் வளர்ச்சி அடைவீர்கள்.

கடின உழைப்புக்குப் பிறகு வெற்றி பெறுவீர்கள்.

பணியாளர்கள் டென்ஷனாக இருப்பீர்கள்.

தனுசு

மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.

கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள்.

எச்சரிக்கையாக பயணம் மேற்கொள்ளவில்லை என்றால் விபத்தை சந்திப்பீர்கள்.

மகரம்

நீண்டகால திட்டத்தை இன்று நிறைவேற்றுவீர்கள்.

குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சியை நடத்துவீர்கள்.

கோயில் தரிசனங்களுக்காக குடும்பத்துடன் செல்வீர்கள்.

கும்பம்

கண்ணை மூடிக்கொண்டு காரியம் செய்தாலும் விண்ணைத் தொடும் வெற்றி பெறுவீர்கள்.

கையில் காசு பணம் தாராளமாக புழங்குவதால் ஆடம்பரமாக செலவு செய்வீர்கள்.

சாதுரியமான செயலால் தொழிலில் சாதகமான பலனை அடைவீர்கள்.

மீனம்

எச்சரிக்கையாக செயல்படாவிட்டால் உறவினர்கள் மத்தியில் கெட்ட பெயர் எடுப்பீர்கள்.

வேலை காரணமாக அலைபவர்கள் வேளை தவறாமல் சாப்பிட தவறாதீர்கள்.

பிள்ளைகள் கேட்டதை வாங்கி கொடுப்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00