Home » இன்றைய ராசிபலன்: 17 ஏப்ரல், 2024

இன்றைய ராசிபலன்: 17 ஏப்ரல், 2024

by namthesamnews
0 comment

குரோதி வருடம் சித்திரை மாதம் 4 ஆம் தேதி புதன்கிழமை 17.04.2024 சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

எந்தக் காரியத்திலும் முடிவு எடுக்க முடியாமல் தவிப்பீர்கள்.

வெளிப்படையாகப் பேசி வம்பை விலைக்கு வாங்காதீர்கள்.

வங்கிக் கணக்கில் இருந்து வீட்டுத் தேவைக்காகப் பணம் எடுப்பீர்கள்.

ரிஷபம்

தொழிலுக்குத் தேவையான உதவிகளை பெற வெளியூர் செல்வீர்கள்.

கூட வேலை பார்ப்பவர்கள் செய்யும் இடையூறுகளால் பணியை முடிக்க சிரமப்படுவீர்கள்.

மிதுனம்

கேட்ட உதவியை வெளிநாட்டில் இருந்து தாமதம் இன்றி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் வந்த லாபத்தால் வங்கி இருப்பை உயர்த்துவீர்கள்.

விவசாயப் பொருட்கள் உற்பத்தியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்

அரசு வேலையில் விரும்பிய இடத்திற்கு மாற்றல் பெறுவீர்கள்.

கலைத்துறையினர் சாதனை படைப்பீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் வெற்றிகரமாக அதைத்தாண்டி செல்வீர்கள்.

சிம்மம்

குடும்பப் பிரச்சினைகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள்.

விரும்பிய பொருளை வாங்கி கொடுத்து காதலியை மகிழ்ச்சிப் படுத்துவீர்கள்.

கிட்னியில் உருவான கல் பிரச்சனைக்காக மருத்துவம் பார்ப்பீர்கள்.

கன்னி

கோபத்தைக் கட்டுப்படுத்தி நிதானமாக நடந்து கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக மாறுவதைப் போல் உணர்வீர்கள்.

துலாம்

வியாபாரத்தில் இருந்த இடையூறுகளை விவேகத்தோடு நீக்குவீர்கள்.

உங்களோடு பகைமை பாராட்டியவர்களிடம் பாசத்தை விதைப்பீர்கள்.

அலைச்சல் காரணமாக ஒழுங்காகச் சாப்பிட முடியாமல் அவதிப்படுவீர்கள்.

விருச்சிகம்

வியாபாரத்திற்குத் தேவையான பணம் கைக்கு வர தாமதமாவதால் தடுமாற்றம் அடைவீர்கள்.

குடும்பத்தில் கருத்து வேறுபாடு வராமல் கவனமாக நடந்து கொள்வீர்கள்.

தனுசு

வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்வீர்கள்.

பிள்ளைகளின் கல்வி தொடர்பான கவலை நீங்கி நிம்மதி அடைவீர்கள்.

தேவையில்லாத செலவு வந்து சிரமப்படுவீர்கள்.

மகரம்

புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு கோயில் திருப்பணிகள் செய்வீர்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.

வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள்.

கும்பம்

உங்கள் வீட்டிற்கு யாரோ செய்வினை வைத்ததாக நம்புவீர்கள்.

அதிலிருந்து விடுபடுவதற்கு குறி பார்க்க செல்வீர்கள்.

மனைவிக்கு அடிக்கடி உடல் கோளாறு ஏற்படுவதால் மனம் சங்கட்டப்படுவீர்கள்.

மீனம்

எதிலும் நேர்மையுடன் நடக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

எதிர்காலத்திற்காக பணத்தை முதலீடு செய்வீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00