மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருந்தால் எல்லா காரியத்தையும் சாதித்துக் கொள்ளலாம். குறிப்பாக பெண்கள் இன்று கோபப்படவே கூடாது. அவசரப்பட்டு பேசவே கூடாது. நின்று நிதானமாக இருங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று தினமும் செய்யக்கூடிய வேலையில் கூடுதல் அக்கறையும் கவனமும் எடுத்துக் கொள்ள வேண்டும். பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக செலவு செய்யாதீங்க.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று சாமர்த்தியமாக நடந்து கொள்வீர்கள். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், அதை சுலபமாக சமாளித்து விடுவீர்கள். இதனால் வேலையில் நல்ல பெயர் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் மனதில் நினைத்த நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்திலிருந்து புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலையும் நல்லபடியாக நடக்கும். சொன்ன நேரத்துக்கு சொன்ன வேலையை முடித்துக் கொடுத்து விடுவீர்கள். வாக்கை காப்பாற்ற கூடிய நாள் இது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வழக்கத்தை விட வேலை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் வேற வருகிறது. அதை சந்தோஷமாக வரவேற்க வேண்டும் என்றால், இன்றைக்காண வேலையை முடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் சில பேர் தலையில் விழும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீர்கள். வீட்டில் விருந்தினர்களின் வருகையால் சந்தோஷம் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று உஷாரா இருந்துக்கோங்க. ரொம்ப தெரிஞ்சவங்க, இவங்க என்னுடைய பெஸ்ட் பிரண்ட், என்று சொல்லிக் கூட அவர்களிடம் உங்களுடைய பர்சனல் விஷயங்களை ஷேர் பண்ண கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். நல்ல மனிதர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். உங்களுடைய வார்த்தையில் இன்று அதிக கவனம் தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று டென்ஷன் குறைய கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எதையோ சாதித்தது போல ஒரு உணர்வு இருக்கும். நல்லது நடக்கும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)