குரோதி வருடம் வைகாசி மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை 16.05.2024 சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
பல வழிகளில் பணம் வருவதற்கான பாதைகளைத் தேர்ந்தெடுப்பீர்கள்.
புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சனையை சந்திப்பீர்கள்.
காதலியால் மன நிம்மதியை இழப்பீர்கள்.
ரிஷபம்
தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்புகளை தூள் தூளாக்குவீர்கள்.
கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள்.
மனையிடம் வாங்குவீர்கள். புதிய வீட்டில் குடியேறுவீர்கள்.
மிதுனம்
ஏற்றமாக இருந்த வியாபாரத்தில் சின்ன சின்ன இடையூறுகளுக்கு ஆளாவீர்கள்.
வெளியூர் பயணங்களால் அலைச்சலில் அவதிப்படுவீர்கள்.
வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தியை பெறுவீர்கள்.
கடகம்
பிரிந்து போன குடும்பங்களை ஒன்று சேர்ப்பீர்கள்.
உங்கள் அறிவாற்றல் அதிகரித்து மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
பிள்ளைகளின் கல்வி திறனால் சந்தோசம் அடைவீர்கள்.
சிம்மம்
பொல்லாங்கு பேசுபவர்களால் மனப் பாதிப்படைவீர்கள்.
தொழில் துறைகளில் நிதானம் காட்டுவீர்கள்.
கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த நன்மையை அடைய மாட்டீர்கள்.
அரசு ஊழியர்கள் நிதானத்தை இழக்காதீர்கள்.
கன்னி
கணவன் மனைவி உறவில் நீடித்த சங்கடங்களை சந்தோசமாக பேசி சரி செய்வீர்கள்.
செய்த முதலீட்டில் உடனே வருமானம் வரும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு குறைவதை உணர்வீர்கள்.
துலாம்
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மும்முரமாக இருப்பீர்கள்.
வெளி வட்டாரங்களில் செல்வாக்கையும் அந்தஸ்தையும் அதிகரிப்பீர்கள்.
பண வரவு அதிகமாக இருப்பதால் கடனை அடைத்து நிம்மதி பெறுவீர்கள்.
விருச்சிகம்
கடினமான நெருக்கடிகளைக் கடந்து செல்வீர்கள்.
இதுவரை உடல்நிலையில் இருந்த பாதிப்பை மருத்துவ சிகிச்சை மூலம் சரி செய்வீர்கள்.
மார்க்கெட்டிங் தொழிலில் அலைச்சலால் உடல் சோர்வு அடைவீர்கள்.
தனுசு
உங்கள் புத்திசாலித்தனத்தால் வருமானத்தைப் பெருக்குவீர்கள்.
பணத்தின் மீது இருந்த மதிப்பை இப்போது உணர்ந்து கொள்வீர்கள்.
கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள்.
மகரம்
கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் இருமடங்கு எச்சரிக்கையாக செயல்படுவீர்கள்.
வருமானத்திற்காக இடம் மாறி செல்வீர்கள்.
அனுசரித்து நடந்து மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.
கும்பம்
சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள்.
மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை நடத்துவீர்கள்.
குலதெய்வ வழிபாட்டால் உடல் கோளாறுகளை சரிப்படுத்துவீர்கள்.
மீனம்
வியாபாரத்தில் இருந்த சின்னச் சின்ன சிக்கல்களை அகற்றுவீர்கள்.
சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள்.
பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் கணிசமான பலன் பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)