குரோதி வருடம் சித்திரை மாதம் 30 ஆம் தேதி திங்கட்கிழமை 13.05.2024 சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
பங்கு முதலீட்டில் லாபம் பெறுவீர்கள்.
கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவீர்கள்.
உறவினர்கள் வீடு தேடி வந்து உதவி செய்வார்கள்.
ரிஷபம்
உங்களை வீழ்த்த தொழில் எதிரிகள் திட்டம் தீட்டுவார்கள்.
சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
அலைச்சலுக்குத் தகுந்த பலனை அனுபவிப்பீர்கள்.
நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம்
தேவை இல்லாமல் வாக்குக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
கொடுத்த கடனை திருப்பிக் கேட்டால் பகையை சம்பாதிப்பீர்கள்.
மனைவி சொல்லும் ஆலோசனையைக் காது கொடுத்து கேளுங்கள்.
கடகம்
ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட மந்தநிலையால் சங்கட்டப்படுவீர்கள்.
வெளியூர் பயணங்களில் ஏமாற்றங்களைச் சந்திப்பீர்கள்.
உதவி கேட்டு வருபவர்களின் சிரமத்தைப் போக்குவீர்கள்.
சிம்மம்
கடினமாக வேலை பார்த்து மேல் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
பெட்டிக் கடை வியாபாரிகள் ஓரளவு லாபம் பார்ப்பீர்கள்.
போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் கை பணத்தை இழந்து கஷ்டப்படுவீர்கள்.
கன்னி
வியாபாரத்தில் புதுமையான திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.
தொழிலுக்காக தேவைப்பட்ட பணத்தை சேர்ப்பீர்கள்.
கட்டிடத் தொழிலில் இருப்பவர்கள் ஓய்வின்றி வேலை பார்ப்பீர்கள்.
துலாம்
அடுத்தவர்களின் பாராட்டைப் பெறுவதற்கு ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள்.
கூலி வேலை பார்ப்போர் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து குதூகலம் அடைவீர்கள்.
கடன் பிரச்சினைகள் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்து நிம்மதி அடைவீர்கள்.
விருச்சிகம்
வேலை சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் போடுவதை நிறுத்தி வையுங்கள்.
வாகனங்கள் ஓட்டும்போது செல்போனில் பேசாதீர்கள்.
வெளியூரில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தியை தாமதமாக பெறுவீர்கள்.
தனுசு
துவண்டு கிடந்த தொழிலை தூக்கி நிறுத்துவீர்கள்.
வாக்கு சாதுர்யத்தால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.
வீட்டில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த வேலையை செய்வீர்கள்.
மகரம்
மூச்சுவிட முடியாத அளவுக்கு ஏற்பட்ட வேலைப்பளுவால் தலைசுற்றிப் போவீர்கள்.
கடின உழைப்பால் அதிகாரிகளை திருப்திப்படுத்துவீர்கள்.
உடன் வேலை செய்பவர்களால் உபத்திரவங்களைச் சந்திப்பீர்கள்.
கும்பம்
பூர்வீகச் சொத்துக்களை விற்பதில் தடையை எதிர்நோக்குவீர்கள்.
குழந்தைப் பாக்கியம் இல்லை என்று தவிக்கும் குடும்பத்தில் சந்தான விருத்தி ஏற்பட்டு சந்தோசப்படுவீர்கள்.
குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.
மீனம்
சொந்த வீடு வாங்குவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள்.
தொலைத்தொடர்பு சார்ந்த தொழில்களில் ஏற்றம் காண்பீர்கள்.
பரம்பரைச் சொத்துக்களின் பராமரிப்புச் செலவை அதிகரிப்பீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)