குரோதி வருடம் சித்திரை மாதம் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 10.05.2024 சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
பங்காளி சண்டையை பஞ்சாயத்து மூலம் முடிவுக்கு கொண்டு வருவீர்கள்.
சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் இறுதி வெற்றியை பெறுவீர்கள்.
உடன் வேலை பார்க்கும் பெண்ணின் உள்ளத்தை கவர்வீர்கள்.
ரிஷபம்
புதிய முயற்சியில் இறங்கினால் தோல்வியை சந்திப்பீர்கள்.
வியாபார எதிரிகளால் பொருள் இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுவீர்கள்.
வருடாந்திர மருத்துவ பரிசோதனையை செய்து கொள்ள மறக்காதீர்கள்.
மிதுனம்
உறவினர்கள் சண்டையால் உறக்கத்தை தொலைப்பீர்கள்.
தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளுக்கு எதிரிகளின் இடையூறு ஏற்படும்.
வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திண்டாடுவீர்கள்.
கடகம்
வர்த்தகத் துறையில் சிக்சர் அடிப்பீர்கள்.
எதிர்பார்த்ததை விட வியாபாரத்தில் அதிகம் லாபம் பார்ப்பீர்கள்.
மைத்துனருக்காக மருத்துவச் செலவு செய்வீர்கள்.
சிம்மம்
துணிச்சலுடன் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
அந்நிய நாட்டில் இருந்து பொருளை இறக்குமதி செய்வீர்கள்.
அடுத்தவருக்கு உதவி செய்து அந்தஸ்தை உயர்த்தி கொள்வீர்கள்.
கன்னி
இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்வீர்கள்.
ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
தந்தையாருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து வைப்பீர்கள்.
துலாம்
வெட்டி செலவு செய்யாதீர்கள்.
அவசர தேவைக்காக நகைகளை அடகு வைப்பீர்கள்.
அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டு அவமானம் அடைவீர்கள்.
விருச்சிகம்
திருமண பேச்சு முடிவடைந்து கல்யாண வேலைகளை ஆரம்பிப்பீர்கள்.
அவசியமான நேரத்தில் அன்பு செலுத்தும் பெண்கள் பண உதவியை பெறுவீர்கள்.
வியாபாரத்தை விறுவிறுப்பாக நடத்துவீர்கள்.
தனுசு
எதிரிகளின் தொல்லைகளால் தூக்கத்தை இழப்பீர்கள்.
வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க தடுமாறுவீர்கள்.
அரசாங்க ஊழியர்கள் அவஸ்தையை சந்திப்பீர்கள்.
மகரம்
இரும்பாக இருக்கும் பெண்ணின் மனத்தை கரும்பாக மாற்றுவீர்கள்.
வாக்கு சாதுர்யத்தால் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.
இடையில் ஏற்படும் சின்னத் தொல்லைகளைக் கிள்ளி எறிவீர்கள்.
கும்பம்
பணப்புழக்கம் இருந்தாலும் மனக்கவலையால் தவிப்பீர்கள்.
தேவையில்லாத சிந்தனையால் தூக்கத்தைக் இழப்பீர்கள்.
மனைவி மக்கள் உறுதுணையால் சற்று ஆறுதல் அடைவீர்கள்.
மீனம்
வீடு வாங்கி பெற்றோர்களின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள்.
புதிய தொழில்கள் தொடங்குவீர்கள்.
அரசுத் துறையில் அற்புதமாக வேலை செய்வீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)