83
திருகோணமலை புல்மோட்டை, வாகரை மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் மக்களின் விருப்பத்தை மீறி கனிய வள அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என
பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வில் மேலும் தெரிவித்த அவர்,
குறித்த திட்டத்தால் வேலை வாய்ப்புக்களை வழங்க முடியும் எனக் கூறினாலும், பிரதேச வளங்களைச் சூறையாடி, அவற்றை பாலைவனங்களாக மாற்றும் நடவடிக்கையாகவே இவை அமைகின்றன.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அமைச்சர் இதைப்பற்றி தனக்கு எதுவும் தெரியாது. தெரிந்தால் அவ்வாறு ஏதும் அதனை தனக்கு தெரியப்படுத்தும் படியும் கூறுகிறார். – என்றார்.
மேலும், அண்மையில் ICCPR சட்டத்தின் கீழ் கைதான போதகர் ஜெரோம் பெர்ணான்டோ 13 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த ICCPR சட்டம் சிறுபான்மை இன தமிழ் பேசும் மக்களுக்கும், எண்ணிக்கையில் சிறுபான்மை இன மக்களுக்கும் மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றது.
“தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன்” என அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் பொதுவெளியில்
தெரிவித்திருந்தார். ஆனால் ஏன் இன்னும் அவரை கைது செய்யவில்லை?, போதகருக்கு ஒரு சட்டம் தேரருக்கு ஒரு சட்டமா? என கேள்வி எழுப்பினார்.