234
சென்னையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தந்தையை மீட்க சென்ற மகன் நீரில் மூழ்கிய உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிச்சாங் புயலின் தாக்கத்தினால் பெய்த கனமழையால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது.
நகரின் உட்பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும், புறநகர் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்த வண்ணம் காட்சியளிக்கிறது.
இதனால் புறநகர் வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளிக்கரணை பகுதியில் நிகழ்ந்த மரணம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கரணையின் காமகோடி நகரைச் சேர்ந்த தம்பதி முருகன் – ரேவதி.
இவர்களது மகனின் பெயர் அருண். கடந்த 4ஆம் திகதி முருகன் வெள்ளத்தில் சிக்கியதாக தெரிய வந்துள்ளது.
இதனால் அவரது மகன் அருண் தந்தையை மீட்க சென்றுள்ளார். ஆனால் மூன்று நாட்கள் கழித்து அருண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் அவரது தந்தை காணாமல் போன அன்று மாடியில் தஞ்சமடைந்ததால் உயிர்தப்பியுள்ளார்.
வெள்ளத்தில் சிக்கிய தந்தையை மீட்க சென்ற மகன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளாது.
பொலிசார் அருணின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.