107
வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்தானது.
நியூசிலாந்து – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 172 ரன்களுக்கு சுருண்டது.
அந்த அணி சான்ட்னர், அஜாஸ் படேல் பந்துவீச்சில் முதல் 4 விக்கெட்டுகளை 47 ரன்கள் எடுப்பதற்குள் இழந்தது.
அதன் பின்னர் ரஹீம் (Rahim) மற்றும் ஷாஹாடத் ஹுசைன் (Shahadat Hossain) இருவரும் அணியை மீட்க போராடினர்.
ஆனால் ரஹீம் 35 ரன்களிலும், ஹுசைன் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
மிராஸ் 20 ரன்கள் எடுக்க ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.
நியூசிலாந்து தரப்பில் சான்ட்னர், பிலிப்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், அஜாஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மிராஸ், டைஜுல் இஸ்லாம் இருவரும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர்.
அவர்களது பந்துவீச்சில் கான்வே 11 ரன்களிலும், டாம் லாதம் (Tom Latham) 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் நிக்கோல்ஸ் ஒரு ரன்னிலும், கேன் வில்லியம்சன் 13 ரன்களில் அவுட் ஆகினர்.
பிலெண்டல் தான் சந்தித்த 2வது பந்திலேயே மிராஸ் ஓவரில் LBW முறையில் ஆட்டமிழந்தார்.
இதனால் நியூசிலாந்து 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது.
இரண்டாம் நாளான இன்று மழை பொழிவு காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. மிட்செல் (12) மற்றும் பிலிப்ஸ் (5) களத்தில் உள்ளனர்.