123
மிச்சாங் புயல் தமிழகத்தின் சென்னை-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று கணித்திருந்த நிலையில், புயலில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த புயலுக்கு மிச்சாங் புயல் என்று பெயர் வைக்கப்பட்டது.
மேலும் இது சென்னை-மசூலிப்பட்டினம் இடையே ஆந்திராவில் 4ஆம் திகதி கரையை கடக்கும் என்று கணித்திருந்தது.
தற்போது புயல் மேலும் ஒரு நாள் நீடித்து, 5ம் திகதி ஆந்திராவின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் பக்தியின் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் போது 80கி.மீ முதல் 90கி.மீ வேகத்தில் காற்று அடிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3000 கன அடி நீர் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2 comments
[…] மிச்சாங் புயல் கரையை கடப்பதால் இன்றிலிருந்து 3 […]
[…] என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிச்சாங் என்று பெயரிடப்பட்டிருக்கும் […]