84
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகள் மீது பெண் ஒருவர் கொதிக்கும் பாலை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொது இடங்களை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டுவது சட்டப்படி குற்றமாகும்.
இருப்பினும் பலர் அதனை கண்டுகொள்ளாமல் ஆக்கிரமிப்பில் ஈடுபடுகின்றனர்.
இது பொதுமக்களுக்கு இடையூறாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் கேரளாவின் ஆலப்புழா மாவட்டம், செங்கனூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகள் மீது தேனீர்க்கடை நடத்தி வந்த, திட்டமேலை சேர்ந்த ராகி எனும் பெண் சூடான பாலை ஊற்றியுள்ளார்.
ராகி மற்றும் பிரசன்னா ஆகியோர் இணைந்து நடைபாதையை ஆக்கிரமித்து தேனீர்க்கடை நடத்தி வந்துள்ளனர்.
அந்த ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் சென்றபோது அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராகி, திடீரென சுடும் பாலை அதிகாரிகள் மீது ஊற்றியுள்ளார்.
இதை அதிகாரிகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அதில் ஒரு சுகாதார அதிகாரி, பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட 6 பேருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.
மேலும், கோபம் தணியாத ராகி கொதிக்கும் எண்ணெயை ஊற்றிவிடுவேன் என்று அதிகாரிகளை மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
1 comment
[…] செய்யப்பட்டது. பாடகி நிகிதா காந்தி இந்நிகழ்ச்சியில் பாடலை பாடிக் கொண்டிருந்தார். […]