கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று பதற்றமான நிலைமை காணப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி, இன்றைய மதிய உணவு நேரத்தில் விமான நிலைய வருகை முனையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த காரணத்தினால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது விமான நிலைய கூட்டுத் தொழிற்சங்கத்தின் தலைவர் தம்மிக்க பெர்னாண்டோ எங்கள் சமூகம் எந்த ஒரு தாய் நிறுவனத்திற்கும் சொந்தமானது அல்ல என விசனம் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கான சம்பள உயர்வை பெற்றுத் தர வேண்டும் என்பதே வழியுறுத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய ஊழியர்களுக்கு 06 வருடங்களாக சம்பள உயர்வு கிடைக்கவில்லை என்பதை விமான நிலைய கூட்டுத் தொழிற்சங்கத்தின் தலைவர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் சம்பள உயர்வு குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் தொகையை அங்கு குறிப்பிட வேண்டும்.
இதனை நிறைவேற்றாவிட்டால் 2024 ஜனவரி 03 ஆம் திகதி முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக உள்ளோம்” என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.