நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவரது பிணையாளர்களை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
விடுப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் விமல் வீரவன்சவுக்கு எதிராக கையூட்டல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் பிரதிவாதி சமர்பித்த ஆட்சேபனைகளுக்கமைய, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
பிரதிவாதி சார்பில் நேற்று முன்னிலையான சட்டத்தரணி, தமது கட்சிக்காரர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்றுரைத்துள்ளார்.
இந்தநிலையில், அவரது உடல் நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.