கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது மாநாட்டுக்கு சில பேருந்து உரிமையாளர்கள் வருகை தர மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மொட்டுக்கட்சியின் இரண்டாவது மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. அதற்காக நாடு முழுவதிலுமிருந்து பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கொழும்பு வருகின்றனர்.
இந்த மாநாட்டிற்காக சில பேருந்து உரிமையாளர்கள் தமது பேருந்துகளை வாடகைக்கு வழங்க மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பல பேருந்துகளுக்கு சேதம் ஏற்பட்டமையே இதற்குக் காரணம் என கருத்துக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.