89
AI மூலம் விலங்குகளின் மொழியை மனிதர்களுக்கு புரியும் வகையில் மொழிபெயர்ப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.
லின்கன் பல்கலைக்கழகத்தின் வெட்டரினரி பிஹேவியரல் மெடிசன் விரிவுரையாளர் டேனியல் மில்ஸ் “உங்களது செல்லப்பிராணி உங்களிடம் கூற நினைப்பதை AI மூலமாக நம்மால் தெரிந்து கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்.
மேலும் கடந்த வாரம் பூனைகளின் முக பாவனைகள் குறித்த ஒரு ஆய்வு The Science Direct பத்திரிக்கையில் வெளியானது.
இதில் பூனைகள் பிற பூனைகளுடன் பேசும்போது கிட்டத்தட்ட 276 முக பாவனைகளை வெளிப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
பூனைகள் மனிதர்களிடம் பேசுவதற்கும் பிற பூனைகளுடன் தொடர்பு கொள்வதற்கும் வேறுபாடுகள் இருப்பதாக லயன் கல்லூரியை சேர்ந்த அசிஸ்டன்ட் சைக்காலஜி விரிவுரையாளர் Dr.Brittany Florkiewicz கூறுகிறார்.
ஆராய்ச்சியாளர்கள் வரிக்குதிரை, வெள்ளை காண்டாமிருகம், கிளிகளுடன் தொடர்பு கொள்ளும் வடிவமைப்பை கண்டறிய முயல்கின்றனர். இது சாத்தியமானால் மனிதர்களின் மொழித்திறன் குறித்த தகவல்கள் நமக்கு கிடைக்கலாம்.