74
உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
பெங்களூரு எம்.சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
அதை தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து சார்பாக ட்ரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக கான்வே 45 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி தனது கடைசி போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது.