ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்வில் (Apple Let Loose Event) புதிய ஐபேட் ப்ரோ 2024 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 13-இன்ச் மற்றும் 11-இன்ச் டிஸ்பிளே அளவைக் கொண்ட புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள் தரமான சிப் வசதியைக் கொண்டுள்ளது.
அதேபோல் முந்தைய மாடல்களை விட தனித்துவமான வடிவமைப்பு கொண்டு வெளிவந்துள்ளன இந்த புதிய சாதனங்கள். குறிப்பாக 13-இன்ச் மற்றும் 11-இன்ச் டிஸ்பிளே கொண்ட புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள் Liquid ரெட்டினா டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளன. மேலும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1600 நிட்ஸ் எச்டிஆர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன இவற்றின் டிஸ்பிளே.
மேலும் இவற்றில் ஒஎல்இடி டிஸ்பிளே இருப்பதால் தனித்துவமான திரை அனுபவம் கிடைக்கும். இரண்டு ஐபேட் ப்ரோ மாடல்களும் எம்4 சிப் (M4 Ship) வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளன. இது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் எம்2 சிப்பை விட 50 சதவீதம் எம்4 சிப் வேகமானது என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த சாதனங்களை வேகமாக இயக்க முடியும். அனைத்து பயனர்களுக்குத் தகுந்தபடி இந்த டேப்லெட் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மாடல்களின் முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் True Depth கேமரா உள்ளது.
அதேபோல் இந்த டேப்லெட் மாடல்களின் பின்புறத்தில் 12-மெகாபிக்சல் பிரைமரி கேமரா + LiDAR ஸ்கேனர் உள்ளன. பின்புற கேமரா உதவியுடன் 4கே ProRes வீடியோ பதிவு செய்ய முடியும். அதேசமயம் 30fp samd ஸ்லோ மோஷன் வீடியோ பதிவும் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.