99
அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெலை வீழ்த்துவதே நோக்கமாக இருந்ததாக தோல்விக்கு பின் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கவுகாத்தியில் நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
முதலில் ஆடிய இந்திய அணி 222 ரன்கள் குவித்தது. வாணவேடிக்கை காட்டிய கெய்க்வாட் 57 பந்துகளில் 7 சிக்ஸர், 13 ஃபோர்களுடன் 123 ரன்கள் விளாசினார்.
கேப்டன் சூர்யகுமார் 39 ரன்களும், திலக் வர்மா 31 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் ஹார்டி (Hardie) 16 ரன்களில் வெளியேற, இங்கிலிஸ் (Ingilis) 10 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து டிராவிஸ் ஹெட் (Travis Head) 18 பந்துகளில் 35 ரன்கள் விளாசிய ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மேக்ஸ்வெல் (Maxwell) சிக்ஸர் மழை பொழிந்தார்.
47 பந்துகளில் சதம் விளாசிய அவர், கடைசி வரை அவுட் ஆகாமல் 104 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்ஸர், 8 ஃபோர்கள் அடங்கும்.
அவருக்கு உறுதுணையாக மேத்யூ வேட் (Mathew Wade) 28 ரன்கள் எடுக்க, அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோல்விக்கு பின்னர் பேசிய சூர்யகுமார் யாதவ் கூறுகையில்,
“மேக்ஸ்வெல் களமிறங்கிய நொடி முதல் அவரது விக்கெட்டை விரைந்து வீழ்த்துவது தான் எங்களின் நோக்கமாக இருந்தது.
Drinks இடைவெளியின்போது கூட மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று தான் பந்துவீச்சாளர்களிடம் கூறினேன். ஆனால் கடைசி வரை அது நடக்கவில்லை” என தெரிவித்தார்.