80
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், 2023 உலகக்கோப்பையில் இந்திய அணி தோற்றதால் மனமுடைந்து போனதாக கூறியுள்ளார்.
2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அவுஸ்திரேலிய அணியிடம் இந்தியா கோப்பையை இழந்தது.
பேட் கம்மின்ஸ் தலைமையில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
அதன் பின்னர் அந்த அணியின் வீரர் மிட்செல் மார்ஷ் உலகக்கோப்பை மீது கால்கள் வைத்தபடி அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
மேலும், தோல்வியால் கவலையடைந்த இந்திய ரசிகர்கள் சிலர் அவுஸ்திரேலிய வீரர்களை திட்டி சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டனர்.
இன்னும் சிலர் இந்தியரான மேக்ஸ்வெலின் மனைவியை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு முதல் உலகக்கோப்பையை பெற்று தந்த கபில்தேவ் அணியின் தோல்வியால் வேதனை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நன்றாக விளையாடியும், இந்திய அணி தோற்றத்தை நினைத்து நான் மனமுடைந்து போனேன். இந்த முறை செய்த தவறில் இருந்து கற்றுக்கொண்டு, அடுத்த முறை இன்னும் சிறப்பாக விளையாடுவோம் என நம்புவோம்” என கூறியுள்ளார்.
2 comments
[…] அணி வென்று சாதனை படைத்த நிலையில், மிட்செல் மார்ஷ் புகைப்படம் தான் பேசு […]
[…] வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி ராய்பூரில் […]