82
மூச்சுப்பயிற்சி என்பது நுரையீரலை பலப்படுத்த மட்டும் அல்லாமல் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
புகைப்பழக்கம், காற்று மாசு ஆகியவை நுரையீரலை பலவீனப்படுத்தும் காரணிகள் ஆகும்.
மூச்சுப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் நுரையீரலை பலப்படுத்த முடியும்.
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவர்கள் மூச்சுப்பயிற்சி மேற்கொள்வதை தவற விட கூடாது.
மூச்சுப்பயிற்சி செய்ய பல முறைகள் உள்ளன.
முதலாவதாக, வசதியாக அமர்ந்த பின்னர் ஒரு கையை மார்பிலும் இன்னொரு கையை வயிற்றிலும் வைத்து சீரான வேகத்தில் ஆழமாக மூச்சை இழுக்க வேண்டும். பின்னர் சீரான வேகத்தில் வெளியிட வேண்டும்.
இன்னொரு முறையில் 2 நொடிகள் மூச்சை இழுத்து 4 நொடிகள் வெளியிட வேண்டும். இது சுவாசத்தை ஒழுங்குப்படுத்தும்.
மற்றுமொரு முறையில், முதுகு தண்டுவடத்தை நேராக வைத்தபடி அமர்ந்து, வலது நாசியை வலது கை கட்டை விரலால் மூடி, இடது நாசியால் மூச்சை உள்ளே இழுத்து சுவாசிக்கவும்.
பின்னர் வலது கை மோதிர விரலால் இடது நாசியை மூடியபடி இடது நாசியில் மூச்சை இழுத்து சுவாசிக்கவும். இந்த சுழற்சியை தொடந்து செய்யவும்.
மேலும் மூக்கின் வழியாக சீரான வேகத்தில் மூச்சை இழுத்து வாய் வழியே வெளியிடுவது, வாய் வழியே மூச்சை இழுத்து மூக்கின் வழியே வெளியிடுவது போன்ற சுவாசப் பயிற்சிகள் பயனுள்ளவையாகும்.
இந்த வகையான மூச்சுப்பயிற்சிகள் சுவாசத்தை சீராக்குவதுடன் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.