112
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகளில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆண்டிகுவாவில் நடந்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் ஆடியது. சால்ட் 45 ரன்களும், வில் ஜேக்ஸ் 26 ரன்களும் எடுத்து வெளியேறினர். டக்கெட் 20ரன்கள் எடுத்த நிலையில் கரியா ஓவரில் போல்டு ஆனார்.
ஹாரி புரூக் ஒருபுறம் அபாரமாக விளையாட, கேப்டன் பட்லர்(3), லிவிங்ஸ்டன் (17) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். எனினும் அரைசதம் விளாசிய புரூக் 71 (72) ரன்கள் எடுத்தார்
அதன் பின்னர் சாம் கர்ரன் 38 (26) ரன்களும், கர்ஸ் 31 (21) ரன்களும் எடுக்க இங்கிலாந்து அணி 325 ரன்கள் குவித்தது. ஷெப்பர்ட், மோட்டி மற்றும் ஓ தாமஸ் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்தது. அதனாஸி அதிரடியாக 65 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். அடுத்து பிரண்டன் கிங் 35 ரன்களிலும், கார்ட்டி 16 ரன்கலிலும் ஆட்டமிழந்தனர்.
ஹெட்மையர் 32 ரன்கள் எடுத்த நிலையில் அட்கின்சன் ஓவரில் அவுட் ஆனார். ஆனால் கேப்டன் ஷாய் ஹோப் சிக்ஸர் மழை பொழிந்தார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷெப்பர்ட்டும் அதிரடியில் மிரட்டினார்.
இந்த கூட்டணி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. ஷெப்பர்ட் 28 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சதம் விளாசிய ஹோப் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தார்.
ஷாய் ஹோப் 83 பந்துகளில் 7 சிக்ஸர், 4 பவுண்டரிகளிடன் 109 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன், ரெஹான் அஹ்மது தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.