95
தொடர்மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகமாக இருப்பதனால், குளத்தின் வான் கதவுகள் பாதுகாப்பு கருதி திறக்கப்படும் சாத்தியங்கள் அதிகமாகவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
தொடர்மழை பெய்யுமாயின், முதற்கட்டமாக சிறிய அளவில் நீரை வெளியேற்றும் வகையில் கதவுகள் திறக்கப்படும்.
குளத்தை சுற்றியுள்ள தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், கால்நடைகள், வாழ்வாதாரங்கள் தொடர்பிலும் அதிகம் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.