இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கு மன தைரியம் சற்றும் இல்லை என இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
இந்தியாவிடம், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி இல்லை எனவும், எமது மீனவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தால் அது ஏற்கக் கூடியது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் அப்படி கூறமுடியாத நிலையில் உள்ளார். ஏனெனில் அவர் தமது பதவிகளையும், கதிரைகளையும், இருப்புக்களையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் இந்தியாவின் செட்டைக்குள் உருவாக்கப்பட்ட நாம், தமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என நம்பியிருக்கும் எமது மக்களுக்கு எமது கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க விட முடியாது.
எமது மக்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் என இந்தியாவில் இருக்கும் எமது மீனவர்களை வேண்டுகிறோம். இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கிலே இலங்கை வெளிவிவகார அமைச்சர் செயற்படுகிறார். – என்றார்.