84
ராகமை – வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக ராகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்த மூவரும் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் 17 வயதுடைய இளைஞரும், பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.