Home » இன்றைய ராசிபலன்: 5 ஏப்ரல், 2024

இன்றைய ராசிபலன்: 5 ஏப்ரல், 2024

by namthesamnews
0 comment

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 05.04.2024 சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். மாணவர்கள் கல்வியில் திறமையை அதிகரிப்பீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெற்று பிரகாசிப்பீர்கள்.

ரிஷபம்

எந்தக் காரியத்திலும் நன்கு யோசித்து இறங்குவீர்கள். குடும்பம் பற்றிய கவலையால் மன வேதனைப்படுவீர்கள். உறவினர்கள் கொடுக்கும் தொல்லையால் டென்ஷன் ஆவீர்கள்.

மிதுனம்

எல்லாம் தெரியும் என்ற நினைப்பை மூட்டைகட்டி வையுங்கள். கைமாற்றாக பணம் கொடுப்பதைத் தவிருங்கள். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடாதீர்கள்.

கடகம்

நயந்து பேசி நண்பரின் திருமணத்தை நல்ல விதமாக முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே பாசத்தை அதிகரிப்பீர்கள். புதிய வீடு வாங்க திட்டம் தீட்டுவீர்கள்.

சிம்மம்

மற்றவர்களுக்காக நீங்கள் செய்யும் வேலையில் சாதகமான பலனை அடைவீர்கள். கடுமையான போராட்டத்தில் தொழிலை நடத்துவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்பீர்கள்.

கன்னி

பொறுமையாக இருந்து பூர்வீகச் சொத்தை அடைவீர்கள். தொழிலில் வேகம் காட்டி போட்டியாளர்களைத் திணறடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்புக்காக பணம் சேர்ப்பீர்கள்.

துலாம்

நீண்டகாலமாக நினைத்திருந்த இடத்தை வாங்கி பத்திரம் போடுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த வங்கிக் கடன் பெறுவீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பால் ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.

விருச்சிகம்

போட்டிகள் அதிகரித்து வியாபாரத்தில் சிக்கலை சந்திப்பீர்கள். வேலையைக் கெடுக்கஇ கூட இருப்பவர்களே குழி பறிப்பார்கள். சிறு வியாபாரிகள் ஏதாவது ஒரு இடையூறால் சிரமப்படுவீர்கள்.

தனுசு

வழக்கறிஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள் முத்திரை பதிப்பீர்கள். வியாபாரத்தில் காட்டும் வேகத்தால் லாபத்தை கூட்டுவீர்கள்.

மகரம்

சாப்பிடுவதற்கு மட்டும் வாயைத் திறந்தால் சங்கடங்களை சந்திக்க மாட்டீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைத் தவறாகப் புரிந்து கொள்வதால் வேதனை அடைவீர்கள்.

கும்பம்

அரசாங்க வேலைகள் இழுபறியாக நடந்து அலைச்சலால் அவதிப்படுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் சுணக்க நிலையை காண்பீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்யப்போய் வம்பில் மாட்டிக் கொள்வீர்கள்.

மீனம்

நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறுவதால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் அதிகமான வருமானம் அடைவீர்கள். வியாபாரத்தில் காதலியையும் கூட்டு சேர்த்துக் கொள்வீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

 

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00