Home » அவுஸ்திரேலியா 487 ரன்கள் குவிப்பு! அறிமுக டெஸ்டிலேயே அதகளம் செய்த பாகிஸ்தான் வீரர்

அவுஸ்திரேலியா 487 ரன்கள் குவிப்பு! அறிமுக டெஸ்டிலேயே அதகளம் செய்த பாகிஸ்தான் வீரர்

by namthesamnews
0 comment
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று, தனது முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
முதல் போட்டியானது நேற்று அவுஸ்திரேலியாவின் ஆப்டஸ் மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற அவுஸ்திரேலியா, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னரின் சிறப்பான பேட்டிங்கால் அந்த அணி பெரிய ஸ்கோரை எட்டியது.
அந்த அணி சார்பாக வார்னர் 164 (211), மிட்செல் மார்ஷ் 90 (107) ஆகியோரின் பங்களிப்பால் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 20.2 ஓவர்கள் வீசி 111 ரன்கள் விட்டுகொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
இமாம்-உல்-ஹக் 38 (136), குர்ரம் ஷாஜாத் 7 (18) ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணி 355 ரன்கள் பின்தங்கிய நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00