116
அதிபர் தரம் ஒன்றைச் சேர்ந்தவர்கள் 214 பேர் வடக்கு மாகாணத்தில் தேவையாக உள்ளனர். இருப்பினும் தற்போது கடமையில் 129 அதிபர்களே கடமையில் உள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச்சடத்தின் மூலம் கோரப்பட்ட தகவல்களுக்கு, வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு இது தொடர்பில் பதிலளித்துள்ளது.
குறித்த பதிலில்,
வடக்கு மாகாணத்தில் 95 1AB பாடசாலைகளும், 124 1C பாடசாலைகளும் காணப்படுகின்றன.
இப் பாடசாலைகளில் 128 பாடசாலைகளில் மாத்திரமே தரம் ஒன்றைச் சேர்ந்த அதிபர்கள்
கடமையாற்றுகின்றனர்.
அத்துடன் தரம் ஒன்றைச் சேர்ந்த 21 அதிபர்கள் கோட்டக் கல்விப்பணிப்பாளர்களாக கடமையாற்றுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.