79
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் யாழ்ப்பாண மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடத்திய சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நிகழ்வு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நேற்றையதினம் காலை இடம்பெற்றது.
நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனும், சிறப்பு விருந்தினர்களாக சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் செல்வி அகல்யா செகராசா, தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் சிவகெங்காதரன், சங்கவி பிலிம்ஸ் & சங்கவி தியேட்டர் பணிப்பாளர் Dr.துரைராசா சுரேஸ், வட மாகாண கைத்தொழில் அபிவிருத்தி சங்கத் தலைவர் தம்பிராசா சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.
அத்துடன், இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அமைப்புக்களின் அங்கத்தவர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதில், மாற்றுத் திறனாளிகளின் நடனம், கவிதை, பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், சுயதொழில் முயற்சியாளர்களின் கௌரவிப்புகளும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.