Home » தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு நீண்ட நாள் காதலியுடன் திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு நீண்ட நாள் காதலியுடன் திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்

by namthesamnews
0 comment
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜெரால்டு கோட்ஸி தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்டு கோட்ஸி (23).
இவர் ஹன்னா ஹதோர்ன் (Hannah Hathorn) என்ற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.
இந்த நிலையில் கோட்ஸிக்கும், அவரது நீண்ட நாள் காதலி ஹன்னா ஹதோர்னுக்கும் திருமணம் நடந்துள்ளது.
இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அத்துடன் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் புதுமணத் தம்பதிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
கோட்ஸி நடந்து முடிந்த 8 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் லீக் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (18) கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் கோட்ஸி பெற்றார்.
மேலும், கோட்ஸி தென் ஆப்பிரிக்க அணிக்காக 14 ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகளையும், 2 டெஸ்ட் போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00