கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள்ளனர்.
நாட்டில் (இலங்கையில்) கிராம உத்தியோகத்தர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில், 2600 கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
புதிய உத்தியோகத்தர்களை சேவையில் இணைப்பதற்கான பரீட்சை நேற்று கடந்த 2ம் திகதி சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டது.
இதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு முன்பாக புதிய கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.