வட்டுக்கோட்டை இளைஞன் மரணத்துக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றுள்ளது.
அண்மையில், திருட்டுக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அலெக்ஸ் என்ற 26 வயதுடைய இளைஞன் பொலிஸாரின் சித்திரவத்தைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனளிக்காத நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில், உயிரிழந்தார். இந்த நிலையில், உயிரிழப்புக்கு காரணம் பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞனின் சிறுநீரகம் செயலிழந்தமை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இளைஞனின் இறப்பு தொடர்பான விசாரணைகள் யாழ் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், இளைஞனின் இறப்புக்கு நீதி கேட்டு நேற்றையதினம் மாலை வட்டுக்கோட்டை சந்தி பகுதியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், இளைஞனின் படுகொலைக்கு நீதி கேட்டு இளைஞனின் குடும்பத்தார், உறவினர்கள், மக்கள் மற்றும் சட்டத்தரணி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றிய சட்டத்தரணி இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.