112
உடல் பருமன் என்பது பெரும்பாலானோர் விரும்பாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
பருமனான உடல் இந்த காலத்தில் இளைஞர்களிடத்தில் பெரும் மன அழுத்தத்தை தருகிறது.
மேலும் பல நோய்கள் தொற்றி வளரவும் உடல் பருமன் இடம் கொடுக்கிறது.
பலர் பல வழிகளில் அதிகப்படியான உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல வகையான டயட் முறைகள் புழக்கத்தில் இருந்து வருகிறது.
ஆயினும் சரிவிகித உணவு முறையும், அன்றாடம் செய்யும் உடற்பயிற்சியும் உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்கும் அனைவருக்கும் பொதுவான செயல்முறை ஆகும்.
சிக்கன் பிரியர்களால், சிக்கனை பிரிந்து இருக்கவே முடியாது என்பவர்களால் அந்த சிக்கன் மூலமாகவே உடல் எடையை குறைக்க முடியும்.
சிக்கன் சாப்பிட்டு உடல் எடை குறைக்க, நாட்டுக்கோழியே சிறந்ததாகும்.
உடல் எடை குறைப்பவர்கள் சிக்கனை எண்ணெயில் பொறித்து உண்ண கூடாது.
சிக்கனில் லீன் புரோட்டின் உள்ளதால் வயிற்றில் நீண்ட நேரம் தங்கும். புரோட்டின்கள் கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டுள்ளதால் எடை இழப்பிற்கும் உதவி செய்கிறது.
முதலில் சிக்கனை நன்றாக கழுவிய பின், ஒரு பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் விட்டு சிக்கனை அதிலிட்டு சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து பாதியளவு வேகவைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்னர் சிக்கனை எடுத்து ஒரு வாணலியில் சேர்த்து, அதனுடன் இரண்டு சிட்டிகை இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா மற்றும் சீரகத்தூள் தலா ஒரு சிட்டிகை, 3 சிட்டிகை குழம்பு மசால் தூள், அரை சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதில் தண்ணீர் சேர்க்க தேவையில்லை, சிக்கனில் உள்ள தண்ணீரே போதுமானது.
உங்களுக்கு வேண்டுமென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
பின்னர் தேவையான உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து இறக்கினால் எண்ணெய் கலக்காத ஆரோக்கியமான சிக்கன் தயார்.
உடல் எடை குறைக்கும் பொருட்டு சிக்கன் சாப்பிடும்போது அரிசிச் சோற்றினை சேர்க்க வேண்டாம்.