2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நீர்மின்சாரத்தில் இருந்து தற்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்க
தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டுகளில், இந்த காலப்பகுதியில் இதுபோன்ற மழை எமக்கு கிடைக்கவில்லை.
தற்போது நாட்டில் மழைவீழ்ச்சியானது அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவில் நீர் மின்சாரத்தை பயன்படுத்தக்கூடுய வாய்ப்பு மின்சார சபைக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், தற்போதுள்ள நிலக்கரி ஆலைகள் அல்லது டீசல் ஆலைகளை நிறுத்தி வைக்க முடிந்திருப்பது எங்களுக்கு ஒரு நன்மையாகும். அடுத்த திருத்தம் ஏப்ரல் மாதம்தான் முன்மொழியப்பட்டிருந்தது.
அதன்படி, டிசம்பர் 31ஆம் திகதி எங்களின் இருப்புநிலை அறிக்கை முடிந்த பிறகு, ஜனவரி நடுப்பகுதியில் மீண்டும் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.