147
இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராகவும்,
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும் வவுனியாவில் இன்று காலை போராட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணி வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஊடக சுதந்திரத்தை உறுதிசெய், பொய்வழக்கு போடாதே, ஊடகப்படுகொலைக்கு நீதிவேண்டும், கருத்துச் சுதந்திரமே மக்களின் சுதந்திரம் என்ற கோசங்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.